வங்கதேசத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
அக்கட்சி அறிவித்திருந்த 83 மணி நேர தேசிய அளவிலான "பந்த்'தின்போது தலைநகர் டாக்காவிலுள்ள பங்ளா மோட்டார் பகுதியில், சமூக விரோதிகள் சிலர் செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த போக்குவரத்து காவலர் ஒருவர் உயிரிழந்தாகவும், பேருந்து ஓட்டுநர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு மெஹர்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அவாமி லீக் கட்சித் தலைவர் ஒருவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே போராட்டத்தின்போது கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் பலத்த தீக்காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த 2 பேர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
கடந்த அக்டோபர் முதல் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சியினரால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் 120 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment