எல்லை மீறல் பிரச்னை குறித்து இந்திய-பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை ஆலோசனை நடத்தினர்.
லாகூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை இம்மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும். இதில், இந்தியா சார்பில் எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் சுபாஷ் ஜோஷி தலைமையில் 13 பேர் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் கான் தாஹிர் ஜாவித் தலைமையில் குழுவினர் பங்கேற்றுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், "வான் எல்லைகளை ஹெலிகாப்டர் மற்றும் உளவு விமானங்கள் மீறுவது குறித்தும், எல்லைக் கோட்டை சட்ட விரோதமாக கடப்பது மற்றும் அங்கு நடைபெற்று வரும் கடத்தல் சம்பவங்கள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் விரிவாக ஆலோசனை நடத்தினர்' என்று பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
No comments:
Post a Comment