29.11.13

அமலா பாலுக்கு மோகன் லால் சிபாரிசு

அசின், நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள், தாய்மொழியான மலையாளத்தை சுத்தமாக மறந்து விட்டபோதும், அமலா பால் போன்ற சில நடிகைகள், அவ்வப்போது மலையாள படங்களிலும் நடிக்கின்றனர்.கடந்த ஆண்டு மோகன் லாலுடன், ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா பால்.
அந்த படம் பெரிய ஹிட்டானதால், இப்போது, தான் நடிக்கும், லைலா ஓ லைலா’ என்ற படத்தில் நடிக்க, அமலா பாலுக்கு, சிபாரிசு
செய்திருக்கிறார் மோகன்லால்.இதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அமலா பால், மோகன் லால் போன்ற நடிப்பு ஜாம்பவான்களுக்கு முன், நானெல்லாம் ரொம்ப சாதாரண நடிகை.
அப்படியிருந்தும், அவர், என் பெயரை பரிந்துரைத்தது, பெருமையாக உள்ளது. அதே சமயம், அவர் பாராட்டும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்ற, பொறுப்புணர்வையும் ஏற்படுத்துகிறது’ என்கிறார்.

No comments:

Post a Comment