18.11.13

நீங்கள் கண்டிப்பில்லாத பெற்றோர்களில் ஒருவரா?

தங்களுடைய பிள்ளைகள் எதைக் கேட்டாலும் அல்லது செய்தாலும் கண்டிக்காமல் அனுமதி கொடுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் பெரும்பாலும், எந்தவித ஒழுங்கையும் கடைபிடிக்காதவர்களாகவும், அடக்கமில்லாதவர்களாகவும், உடை விஷயத்தில் கவனம் இல்லாதவர்களகாவும் மற்றும் பண்பில்லாதவர்களாகவுமே இருப்பார்கள். இது உண்மைதான், என்ற போதிலும், இவர்கள் இப்படிப்பட்டவர்கள் மட்டுமே அல்ல!

"பெற்றோர்கள் எந்த விஷயத்திலும், 8 முதல் 12 வயது குழந்தைகளிடமும், வளர் இளம் குழந்தைகளிடமும் மிகவும் சரியாகத் தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, சில குணாதிசயங்கள் மிகவும் கண்டிப்பில்லாத பெற்றோராக தோன்றச் செய்வதை உணரும் போது, அது பெற்றோர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.


5 signs pushover parents
'கேர்ள்ஸ் ஆன் தி எட்ஜ்' (Girls on the Edge) மற்றும் 'பாய்ஸ் அட்ரிப்ட்' (Boys Adrift) என்ற குழந்தைகள் குணாதிசய முறைகள் பற்றிய நூல்களை எழுதியவர் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள செஸ்டர் கன்டரியில் உள்ள லியோனார்டு சாக்ஸ் எம்.டி மற்றும் பி.ஏச்.டி என்பவர். அவர் தன்னுடைய நூல்களில் 'பெற்றோர்கள் தங்களுடைய பாத்திரங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள்' என்று சொல்கிறார். மேலும் அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய மகன் அல்லது மகள் மிகவும் நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க வேண்டும் என்றோ, அல்லது அவர்கள் ஏமாற்றமடையாமல் இருப்பதிலிருந்து பாதுகாப்பதை மட்டுமே உறுதியாக கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லாமல், அவர்கள் செய்யும் செயல்களுக்கான விளைவுகளை, அவர்களே அனுபவிக்கச் செய்ய வைப்பதற்காக, சில பாதுகாப்பு வளையத்தை நீக்குவதும், உண்மையில் ஒரு புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்' என்றும் அவர் சொல்கிறார்.

இப்போது மேற்கொண்டு படிக்கும் போது, நீங்கள் மிகவும் கண்டிப்பில்லாத பெற்றோர்களில் ஒருவரா என்பதை உணர வைக்கும் அறிகுறிகளையும், ஏன் மாற வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.


1. ஒழுங்கு மற்றும் வரைமுறை இல்லாமை 
பல பெற்றோர்கள் சில வேலைகளை செய்து, தங்கள் பிள்ளைகளை ஒரு வழிக்கு கொண்டு வரும் முயற்சியை மிகவும் தலைவலியான விஷயமாகவே கருதுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், வளரும் சிறுவர்கள் மற்றும் வளர் இளைஞர்கள் நாளடைவில் கட்டுப்பாடுகளோ அல்லது பொறுப்புகளோ இல்லாதவர்களாக சிறுகச் சிறுக மாறி விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, தங்கள் குழந்தையின் நேர்மறை வளர்ச்சிக்கு பெற்றோர்கள் சற்று உழைக்க வேண்டுமென்று உணர்வதற்கு, இதுதான் சரியான தருணம்!

2. சச்சரவுகளைத் தவிர்த்தல்
பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் கேட்கும் அல்லது முன் வைக்கும் விஷயங்களை வேண்டாம் என்று சொல்லாமல், உடனே 'சரி' என்று சொல்வார்கள். இது போன்ற செயல்பாடுகள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இல்லாத பெற்றோர்களிடம் இருக்கும் குணாதிசயமாகும். ஆகவே எதையும் எடுத்ததும் சரி என்று சொல்லாமல், அவர்கள் கேட்பது நல்லதா, கெட்டதா என்பதை அலசி, ஆராய்ந்து பின் முடிவை சொல்ல வேண்டும். இதுவே மிகவும் நல்லது.



3. பள்ளியை ஒரு காரணமாக வைத்திருத்தல் 
புத்திசாலித்தனமாக வளர்ந்துள்ள குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளியை அல்லது படிப்பை ஒரு காரணமாக காட்டி, தங்களுடைய பொறுப்புகளை தட்டிக் கழிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள், படிப்பிற்காக எதையும் தள்ளி வைக்கும் பெற்றோர்கள் இருக்கும் வீடுகளில் அடிக்கடி நடக்கும்.



4. குழந்தைகளுடன் நண்பர் போல பழகுதல் 
சில கட்டாயப்படுத்தாத பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் தங்களை அதிகாரத் தோரணையுடையவராக பார்ப்பதை விட, அவர்களின் வயதையொத்தவரைப் போல பார்ப்பதையே நலம் என்று நினைப்பார்கள். இவ்வாறு இருப்பது நல்லதாக இருந்தாலும், சில சமயங்களில் கெட்டதாக முடியும். ஆகவே இருக்க வேண்டிய நேரத்தில் பெற்றோராக நடப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும்.



5. குழந்தைகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை வழங்குதல் 
தங்கள் பெற்றோர்களிடம் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை கொண்ட வீடுகளில், இளம் மற்றும் மிகவும் இளம் வயதுகளிலேயே சிறுவர்கள் (8-12 வயது) கூட ஸ்மார்ட் போன்களை பெறும் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் ஏதேனும் அவசரத்திற்கு தங்களிடம் பேச வேண்டி வரும், ஆகவே தான் என்று காரணம் கூறுவார்கள். அவ்வாறு போன்களை அவர்கள் கேட்டதும், சிறு வயதிலேயே வாங்கிக் கொடுப்பது நல்ல விஷயமல்ல! சில சமயங்களில் அது அவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும்.

No comments:

Post a Comment