இந்நிலையில், சினேகா கர்ப்பமாகியிருக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. அவர் கர்ப்பமாகியிருப்பதால் குழந்தை பிறந்து 2 வயது ஆகும் வரை இனி எந்த படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சினேகா நடித்துக் கொண்டிருக்கும் ஒருசில படங்களின் படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்துவிட்டு வீட்டில் தங்கி ஓய்வெடுக்கப் போகிறாராம்.
சினேகா கர்ப்பமாகியிருக்கும் செய்தி கேட்டு அவரது கணவர் பிரசன்னா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். மனைவி சினேகாவுக்கு பிடித்தமான உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக வைத்துள்ளாராம் பிரசன்னா.
எது, எப்படியோ இன்னும் இரண்டு வருடங்கள் சினேகாவை திரையில் பார்க்க முடியாது என்பது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம்தான்.
No comments:
Post a Comment