விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலாக மண் அள்ளியதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ் வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ் வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி, லோகநாதன் ஆகிய இருவர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
பொன்முடியின் மகன் கெüதமசிகாமணி, ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாத், ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 6 பேர் ஆஜராயினர்.
இதனைத் தொடர்ந்து இவ் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 21-ம் தேதிக்கு நீதிபதி வெற்றிச்செல்வி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment