கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் தில்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மத்திய அரசும் ஒரு பிரதிவாதியாக வேண்டும் என்று பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்படும் என்று அவர்களிடம் பிரதமர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.
No comments:
Post a Comment