மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) நடைபெறவுள்ள பிரசார கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மும்பையில் உள்ள அமெரிக்க தூதருக்கு அனுப்பிய அழைப்பிதழை திரும்ப பெற இயலாது என்று பாஜக பொதுச் செயலர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பொது கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு மும்பையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்க தூதரகமும் இடம்பெற்றுள்ளது. ஏற்கெனவே வழங்கிய அழைப்பிதழை திரும்பபெற இயலாது. எனினும், அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி அவமதிக்கப்பட்டதை ஏற்று கொள்ள முடியாது. தேசத்தின் கௌரவம் தொடர்பான விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. தேவயானி தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதால் மோடி கூட்டத்தில் அமெரிக்க தூதர் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment