ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறையில் இருந்த பெண்ணை விடுதலை செய்ய கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் விஜயா வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த தாடிக்காரன் என்ற சுப்ரமணியன் என்பவரின் மனைவி பக்கா என்ற விஜயா (50). கடந்த 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது, இவர்களிடமிருந்து ரூ.500-ஐ ஒருவர் பறிக்க முயன்ற போது இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மீது சூளூர் போலிஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கோவை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, சுப்பிரமணியன் வோலூர் மத்திய சிறையிலும், விஜயா வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2000-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி 7-ஆண்டுகள் நிறைவடைந்த ஆயுள் சிறை கைதிகள் முன் கூட்டியே விடுதலை செய்வதற்கு தகுதியானவர்கள் என்று அறிவித்தது. அதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் மனவளர்ச்சி குன்றியவர். இதைக் காரணமாக வைத்து விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்லவது மட்டும் இல்லாமல் காப்பகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, விஜயாவை விடுதலை செய்ய கடந்த 19-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுப் படி விஜயா வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment