ராமர் கோயில் விவகாரத்தில் நரேந்திர மோடி தனது நிலையை தெளிவு படுத்திய பிறகே, பாஜகவுக்கு ஆதரவு தருவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ராமர் கோயில் கட்டுவது குறித்து உறுதியளிக்கும் கட்சிக்கே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோயில் கட்டுவது குறித்து தேர்தல் அறிக்கையில் பாஜக வெளியிட வேண்டும். எங்கள் அமைப்பின் ஆதரவை விரும்பினால், இந்த விஷயத்தில் மோடி தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரசாரங்களில் ராமர் கோயில் குறித்த விவரங்களை மோடி பேசாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.
No comments:
Post a Comment