திருமலை ஏழுமலையானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
இத்திட்டம் 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவுடன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறபட்டதற்கான ரசீதும், ஏழுமலையானின் திருவுருவ படமும், கல்யாண உற்சவ அட்சதையும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற்காக தலைமை அஞ்சலகத்தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும் மாவட்ட வாரியாக செயல்பட்ட இந்த திட்டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்ற இந்த திட்டத்தின் மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.
மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment