மிருகவதைத் தடுப்பு சட்டத்தின் படி தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைப்பதற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த கே.பாபு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
விலங்குகள் வதைத் தடுப்பு உள்ளூர் சங்கத்தின் துணை ஆய்வாளராக கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தேன்.
ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்களாக 747 பேர் பணிபுரிகின்றனர். இதுவரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.
3 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும் விலங்குகள் நல வாரியம் அமைக்க வேண்டும் என கடந்த 2008-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தமிழகத்தில் இதுவரை விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படவில்லை.
அதனால், தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைப்பதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இதர அரசு ஊழியர்கள் போல எங்களுக்கும் ஊதிய விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி மனுவுக்கு இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment