3.12.13

தேர்தலில் டிஜிட்டல் பேனர்: நிபந்தனையை தளர்த்த கோரிக்கை

டிஜிட்டல் பேனர்களை வைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை வரும் மக்களவைத் தேர்தலில், தேர்தல் ஆணையம் தளர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் பிரின்டிங் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சுரேஷ் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: டிஜிட்டல் பிரன்டிங் தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்காக தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். விழிப்புணர்வு விளம்பரங்களை இச்சங்கமே முடிந்த வரை இலவசமாக செய்து கொடுக்க முன் வந்துள்ளது. அரசு விளம்பர வேளைகளைச் செய்திட இச்சங்கத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து, வாழ்வாதாரத்தை பெருக்கிட ஆவண செய்திட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் டிஜிட்டல் பேனர்களை வைப்பதில் உள்ள கடுமையான நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் தளர்த்திட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம். பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு பெயர் பலகைகள் இலவசமாக டிஜிட்டல் முறையில் தயாரித்து கொடுக்கப்படும் என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment