23.12.13

"நேபாளத்திடமிருந்து மின்சாரம் வாங்க இந்தியா தயார்'


நீர் மின்சாரம் தயாரிப்பதற்கான வள ஆதாரங்களைக் கொண்டுள்ள நேபாளத்திடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மத்திய மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், அந்நாட்டில் இந்திய முதலீடுகளைக் கவர்வதற்காக நடைபெறும் வர்த்தகக் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசுகையில், ""இந்தியாவுக்கு மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம், இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) சரிக்கட்ட முடியும்.
இதனால் இரு நாடுகளும் பலனடைய முடியும்'' என்று தெரிவித்தார்.
தற்போது 705 மெகாவாட் நீர் மின் உற்பத்தித் திறன் கொண்ட நேபாளத்தில் 83 ஆயிரம் மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்வதற்குரிய நீர் வள ஆதாரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment