அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் புயல் வீசியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும், சூறாவளிக் காற்றில் பல இடங்களில் கட்டடங்களின் மேற்கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. மரங்கள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்தன. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.
வடக்கு மிசிசிபி பகுதியில் நகரும் வீடு கவிழ்ந்ததில் ஒருவரும், தென்கிழக்கு மிசிசிபி பகுதியில் சாலையின் குறுக்கே கிடந்த மரத்தில் கார் மோதியதில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.
ஆர்கன்சாஸ் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் 5 பேர் காயமடைந்ததாகவும், 24-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment