23.12.13

புத்தாண்டு நள்ளிரவில் மதுக் கடை திறக்க அனுமதி

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், பெங்களூருவில்  வருகிற 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை ஒரு மணி வரை மதுக் கடைகளைத் திறக்க மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, அன்று நள்ளிரவு மதுக் கடைகள், கேளிக்கை விடுதிகள் செயல்பட சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கலால் துறையில் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மதுபானம் பரிமாறாத உணவகங்கள், உணவு இல்லங்கள், தங்கும் விடுதிகள் கலால் துறையின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டியதில்லை. எனினும், புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பாடல்களை இசைப்பதால் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படக் கூடாது. அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment