19.12.13

ரகசிய தொலைபேசி உரையாடல் பதிவுக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் ஆதரவு

அமெரிக்க மக்களின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்வதற்கு ஆதரவாக செனட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரகசியமாக தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது, அந்நாட்டு அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரகசிய தொலைபேசி உரையாடல் பதிவுக்கு ஆதரவாக செனட் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உளவு துறைக்கான செனட் குழுவின் தலைவர் டேனி ஃபெய்ன்ஸ்டெயின் கூறுகையில், "ரகசிய உரையாடல் பதிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதா, இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும்' என்று தெரிவித்தார்.
மற்றொரு உறுப்பினர் ஹாரி ரெய்டு கூறுகையில், இது குறித்து மக்களிடம் விவாதம் நடத்த வேண்டும். ரகசியமாகத் தகவல்களை சேகரிப்பதற்கு ஏற்றவாறு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment