ஜெர்மனியின் முதலாவது பாதுகாப்புத் துறை பெண் அமைச்சராக கிறிஸ்டியன் டெமோக்ராட்ஸ் கட்சியைச் சேர்ந்த உர்சுலா வோன் டெர் லெயன் பதவியேற்றுக் கொண்டார்.
ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் கிறிஸ்டியன் டெமோக்ராட்ஸ் கட்சியைச் சேர்ந்த ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜெர்மனியின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக அதே கட்சியைச் சேர்ந்த உர்சுலா வோன் டெர் லெயன் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இதற்கு முன் இருந்த ஜெர்மன் அமைச்சரவையில் தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சராக உர்சுலா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment