19.12.13

பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி

தொழிலதிபர் பைசூல் மீது செக்ஸ் மோசடி மற்றும் பணமோசடி புகார் கொடுத்த ராதா, திடீரென அந்தப் புகாரை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்தார்.
இதனால் கடுப்பான போலீசார் இந்த மனுவை ஏற்க மறுத்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பைசூல் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் - நடிகை ராதா திடீர் பல்டி

சுந்தரா டிராவல்ஸ் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.
சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூல் மீது நடிகை ராதா பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி தொழிலதிபர் பைசூல் 6 ஆண்டுகள் தன்னோடு குடும்பம் நடத்தியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் மனுவில் நடிகை ராதா குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகார் மனு மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க தொழிலதிபர் பைசூல் 3 முறை முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 3 முறையும் அவரது முன்ஜாமீன் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்த நிலையில் நடிகை ராதா தொழிலதிபர் பைசூலை கைது செய்ய வேண்டுமென்றும், அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்றும் சவால் விட்டு தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்தார்.
போலீஸ் அதிகாரிகள் மீதும் குறை கூறினார். பைசூலை கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து மூன்று முறை நடிகை ராதா முறையிட்டார்.
திடீர் பல்டி
இந்த நிலையில் நேற்று இரவு நடிகை ராதா திடீரென்று வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொழிலதிபர் பைசூல் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், அவர் மீதான வழக்கை கைவிட்டு விடவேண்டும் என்றும் மனு எழுதி கொடுத்துவிட்டு அவசரமாக சென்றார்.
இது போலீசாருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கிவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கில்லை என்றும், இதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் என்று தெரிவித்தனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நடிகை ராதா காரில் ஏறி வேகமாக போய்விட்டார்.
பைசூலை கைது செய்ய தேடிவரும் நிலையில் நடிகை ராதா திடீரென்று புகாரை வாபஸ் வாங்குவதாக பல்டி அடித்திருப்பது குறித்து போலீசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment