24.11.13

நூறாண்டு சினிமா ட்ரெண்டை உடைத்தெரிந்த விஜயசேதுபதி!

ஹீரோ என்றால் முப்பது நாற்பது பேரையாவது பந்தாட வேண்டும். கதாநாயகிகளை கட்டிப்பிடித்து புரள வேண்டும். நல்லவனாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நூறு ஆண்டு சினிமாவின் ட்ரெண்டை உடைத்தெறிந்து கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி.
நான் ஹீரோவல்ல கதைதான் ஹீரோ என்ற கணக்கில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் ஓ.கே செய்யும் கதைகள் வழக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
நீண்டகாலமாக ஹீரோயிசம் கொண்ட படங்களை பார்த்துப்பார்த்து போரடித்துப்போன ரசிகர்களுக்கு இது புதுமையாக இருப்பதால், தொடர்ந்து அவர் நடிக்கிற படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் மிகக்குறைவான பட்ஜெட் கதைகளில் நடித்து பெரிய அளவில் தயாரிப்பாளர்களுககு லாபம் சம்பாதித்துக் கொடுத்து வருகிறார் விஜயசேதுபதி.
இதனால், ஏற்கனவே வளர்ந்து விட்ட ஹீரோக்கள் நாங்கள் எப்போதுமே ஹீரோயிச கதைகளில் இருந்து மாற மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தபோதிலும், வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் விஜயசேதுபதி காட்டிய புதிய ட்ரெண்டுக்கு மாற தயாராகி வருகிறார்கள்.
கூடவே புதிதாக வரும் இயக்குனர்களும், ஹீரோக்களை மனதில் கொள்ளாமல் கதை பண்ணி வருவதால், அடுத்து விஜயசேதுபதி உருவாக்கிய ட்ரெண்டுதான் நிலைக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், ஒருவேளை அப்படி ஒரு ட்ரெண்டு உருவாகி விட்டால், நம்முடைய ஹீரோ ட்ரெண்ட் என்னாவது என்று மேல்தட்டு ஹீரோக்கள் மத்தியில் சிறிய அளவிலான அதிர்வலைகள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment