22.11.13

போட்டிபோட்டு வசூலை குவிக்கும் பாலிவுட் படங்கள்!

2013ம் ஆண்டு இந்தி சினிமாவுக்கு நல்ல வசூல் ஆண்டாகவே இருக்கிறது. சொல்லி அடிக்கிற கில்லி என்பார்களே அதுமாதிரி இந்தப் படம் இத்தனை கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்த்து ரிலீஸ் பண்ணுகிறார்கள்.
அதன்படியே அது வசூலிக்கவும் செய்கிறது. அதுவும் முதல் நாளே கோடிக் கணக்கில் வசூலை அள்ளுகிறது. (லன்ஞ் பாக்ஸ் மாதிரியான படங்களுக்கு இது பொருந்தாது. இது பக்கா கமர்ஷியல் படங்களுக்கான கணிப்பு).
ஷாருக்கான், தீபிகா நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் முதல் நாளில் 33 கோடியை வசூலித்தது. கிரிஷ் 3 முதல் நாளில் 25 கோடியை அள்ளியது. பேஷாராம் 21 கோடியையும், யே ஜவானி ஹே திவானி 19 கோடியையும் வசூலித்தது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏதாவது ஒரு படம் அபூர்வமாக இதுபோன்ற முதல் நாள் வசூலை அள்ளியிருக்கிறது. ரா ஒன். பாடிகார்ட், அக்னீபத், ஏக் தா டைகர், ஆகிய படங்களும் முதல்நாள் வசூலில் சாதனை படைத்த படங்கள்.
இப்போது இந்திப் படங்கள் தனது முதல் நாள் வசூலை வைத்தே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகிறது. டாப் ஹீரோக்களில் யார் படம் முதல் நாளில் அதிகம் வசூலிக்கிறது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்கள். உச்சபட்ச அளவாக கிரிஷ் 3 படம் 3500 தியேட்டர்களில் ரிலீசானது.

No comments:

Post a Comment