ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ‘‘ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல் சட்டத்தின் பிரிவு 370–ன் பல்வேறு அம்சங்கள் குறித்து எங்கள் கட்சி விவாதிக்க விரும்புகிறது. இதில், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெண்களைப் போன்று காஷ்மீர் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லை’’ என சுட்டிக்காட்டினார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் தங்களதுக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி 10 முறை பிரதமர் ஆனாலும், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளார். நீங்கள் விவாதிப்பது குறித்து பேசுகிறிர்கள், பாரதீய ஜனதா எந்த விவாதத்திலும் ஈடுபடாது என்று கூறியுள்ளார்.
முன்னாள் சமாஜ்வாடி கட்சி தலைவர் அமர் சிங் வீட்டில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை சேர்ந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட பரூக் அப்துல்லா, இரு நாடுகளிலும் வளர்ச்சி ஏற்பட ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார். பாகிஸ்தான் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. நீங்கள்(பாகிஸ்தான்) காஷ்மீரை வெற்றி கொள்ள முடியாது. இதனை எனது இரத்ததாலும் எழுத முடியும் என்று கூறினார். காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டு கட்சி தலைவர் கூறுகையில், எனது அம்மா வழி தாத்தாவின் சமாதி லாகூரில் உள்ளது. ஆனால் நான் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறினார்.
பாகிஸ்தான், இந்தியா ஜீலம், செனாப் மற்றும் இந்துஸ் ஆற்றின் திசைய திருப்பலாம் என பயப்படுகிறது. இந்தியா இதனை செய்யாது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment