4.12.13

”நேதாஜியின்” மரணம் சட்டப்படி உறுதி செய்யப்பட்டுவிட்டதா?

”ஆகஸ்ட் 18, 1945-ல் தைவான்
தலைநகர் தாய்பேய் விமான
நிலையத்திலோ,
அதற்கு அருகாமையிலோ நடந்த
விமான விபத்தில்
நேதாஜி இறக்கவில்லை.
எப்படியென்றால்,
நேதாஜி மரணம்
குறித்து இந்திய அரசால்
அமைக்கப்பட்ட
முகர்ஜி கமிஷனிடம், அமெரிக்க
உளவுத்துறையால் தாக்கல்
செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில்
இதனை உறுதிபட
அமெரிக்கா
தெரிவித்துவிட்டது.
தைவான் நாட்டு அரசும்,
”தன்
நாட்டு எல்லைக்குள்
அன்று அப்படி எந்த விபத்தும்
நடக்கவில்லை”
என்று கூறிவிட்டது.
ஜப்பான் அரசும்,
”சுபாஷ்
சந்திரபோஸ் என்ற
பெயரிலோ இச்சிரோ உக்குடா
(நேதாஜிக்கு சூட்டிய
புனைபெயர்)
என்ற
பெயரிலோ எவரும்
இறந்து சுடுகாட்டில்
எரிக்கப்படவில்லை”
என்று
தெரிவித்துவிட்டது
நேதாஜியினுடையது
என்று ஜப்பானிய கோயில்
ஒன்றில் வைக்கப்பட்ட அந்தச்
சாம்பல் மற்றும்
எலும்புகளை டி.என்.ஏ
பரிசோதனை நடத்தவிடாமல்
இந்திய அரசு தடுத்துக்
குழப்பியது உலகுக்கே தெரியும்.
இறுதியாக, முகர்ஜி கமிஷனும்
ஆகஸ்ட் 18, 1945-ல் நடந்த விமான
விபத்தில்
நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது.
இதில்
வேடிக்கை என்னவென்றால்,
எந்தவித காரணமும் கூறாமல்,
தானே நியமித்த
முகர்ஜி கமிஷன்
அறிக்கையை ஏற்க
முடியாது என்று இந்திய
அரசு நிராகரித்தது தான்”
என்கிற தேவபிரதா பிஸ்வாஸ்,
“நேதாஜி தொடர்பான
ஏராளமான ஆவணங்களை பிரதமர்
அலுவலகம்,
உள்துறை அமைச்சகம் மற்றும்
வெளியுறவு அமைச்சகம் ஆகிய
மூன்றும்
சேர்ந்து அழித்து ஒழித்துவிட்டன.
இதை நீதிபதி முகர்ஜி கமிஷனே சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.
“எல்லா ஆதாரமும்
அழிந்து விட்டதா?
என்று கேட்டோம்.
இல்லை,
சுமார் 800 ஃபைல்கள் ‘ரகசிய
ஃபைல்கள்’
என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய
அரசிடம் உள்ளன.
எல்லா நாடுகளிலும்
குறிப்பிட்ட சில ஆண்டுகள்
மட்டுமே ரகசிய ஃபைல்களாக
வைத்திருந்து,
பின்னர்
ஆய்வாளர்களுக்காக
‘பொது ஆவணமாக’
அறிவிப்பார்கள்.
இந்தியாவிலும் அப்படித்தான்.
ஆனால், இந்த 800
ஃபைல்களையும் நிரந்தரமாக
ரகசிய ஃபைல்களாக இந்திய
அரசு வைத்துள்ளது.
இது பகிரங்கப் படுத்தப்பட்டால்
நேதாஜிக்கு நேர்ந்தது என்ன
என்பதை உலகம்
அறிந்து கொள்ளும்” என்கிறார்.
”இதை யாரும் பார்க்க
முடியாதா என்ன?”
“எனக்குக் காட்டி னார்கள்.
ஆனால், அதைப்பற்றிப்பேசவோ,
மேற்கோள் காட் டவோ கூடாது”
என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள்”
என்கிறார் பரூண் முகர்ஜி.
”நேதாஜி உயிருடன் இருந்தார்
என நீங்கள் சொல்லி வந்தீர்கள்?
அரசு இறந்து விட்டதாகத்தானே கூறி வந்தது?”
என்ற கேள்விக்கு பதிலளிக்கும்
பிஸ்வாஸ்,
”மறைந்த பிறகு, நாட்டின் உயர்
தலைவர்களை கௌரவிக்கும்
பாரத ரத்னா விருதை மத்திய
அரசு நேதாஜிக்கு அளித்தது.
அது பற்றி உச்ச நீதிமன்றத்தில்
சர்ச்சை எழுந்தபோது,
அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்க
முடியவில்லை
எனவே, மத்திய
அரசு பின்வாங்கிக் கொண்டது.
அதுமட்டுமல்ல. கொடுத்த பாரத
ரத்னாவையே திரும்பப்
பெற்று ஜகா வாங்கியது.
நேதாஜி வழியில் இந்தியா உருவெடுத்தால்,
நாம் நம் இனத்தை இழந்திருக்கமாட்டோம்.
உலகில் முதல் நாடாக இருந்திருப்போம்.
காங்கிரஸ் மத்திய அரசின் சதிகள் நிறைய !!

No comments:

Post a Comment