நெல்லை: வணிகவரித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி கீழ்நிலை பணிகளில் இருந்து படிப்படியாக பதவி உயர்வு பெறுவோர் உள்ள நிலையில், சமீபகாலமாக நேரடி நியமனம் மூலம் துணை வணிக வரி அலுவலர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு கீழாக பணிபுரிய வேண்டி இருப்பதால், ஏற்கனவே சீனியர் நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். எனவே, முதுநிலை நிர்ணய குளறுபடிகளை முன்தேதியிட்டு சீரமைக்க வேண்டும். குளறுபடிகளுக்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் முன்னிலையில் சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வணிகவரித் துறை சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், வரும் 17, 18, 19ம் தேதிகளில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தி பணிகளை முடக்கத் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக பணியாளர்களிடம் ஆதரவு திரட்டும் பிரசார இயக்க நிகழ்ச்சியை நேற்று தொடங்கினர். மண்டல அளவில் அலுவலகங்களுக்கு போராட்டக்குழு நிர்வாகிகள் நேரில் சென்று பிரசாரம் செய்கின்றனர்
No comments:
Post a Comment