கேரளச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் பலர், சிறையில் இருந்தபடியே பேஸ்புக் வளைதளத்தைப் பயன் படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் சிறைக் கைதிகள் சிறைக்குள் எத்தகைய சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்ற உண்மை வெளிஉலகத்திற்கு தெரிய வந்துள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதாகி கோழிக்கோடு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறையில் வாழும் பெரும்பாலான அரசியல் பிண்ணனி கொண்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சிறப்புப் புலனாய்வு… இது குறித்து கேரளத் தொலைக்காட்சி ஒன்று சிறப்புப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சிறையில் உள்ள கைதிகள் சிலரின் பேஸ்புக் பக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப் பட்டது.
லைக்ஸ்…. அதன்படி, குற்றவாளி ஒருவர் நேற்று மாலை கூட சிறையில் இருந்தவண்ணம் தனது பேஸ்புக் பக்கத்தை அப்டேட் செய்துள்ளதும், மேலும் சிலர் தங்களது நண்பர்களின் கருத்துக்களுக்கு லைக்ஸ், ஷேரிங் கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.சிகப்பு கலரு டி-சர்ட்…. மேலும், ஒரு கைதியின் பேஸ்புக் பக்கத்தில் குற்றவாளி தனது நண்பரின் விருப்பத்திற்கேற்ப சிவப்பு டி-சர்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
ஸ்டைல் போஸ்…. மற்றொரு கைதியோ வாயில் சிகரெட்டுடனும், கூலிங் கிளாஸ் அணிந்தும் விதவிதமாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அரசியல் பின்புலம்…. இவ்வாறு சிறையில் அலம்பல் செய்துள்ள கைதிகள் அரசியல் பின்புலம் உள்ள குற்றங்களில் சம்பந்தம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுகவாசிகள்…. சிறைச்சாலை என்பது தவறு செய்த குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து, மனம் திருந்தி மனிதனாக வாழ வைக்க வேண்டிய ஒரு தண்டனைக் களம். ஆனால், அத்தகைய சிறைச் சாலைகளிலும் குற்றவாளிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி எப்படி சுகவாசிகளாக வலம் வருகிறார்கள் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது மறுக்க இயலாதது.
No comments:
Post a Comment