புதுடெல்லி மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடக்கிறது. டெல்லியில் 15 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஷீலா தீட்சித் தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டது. விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவை பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையினால் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி புதுடெல்லியில் ஏற்பட்டுள்ளது என்று பாரதீய ஜனதா கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினை பாரதீய ஜனதா நிராகரித்துவிட்டது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமையும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எப்போது வெற்றி பெறும் முயற்சியை நிறுத்தியதோ, இது அந்த கட்சிக்கு உண்மையான தோல்வி என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment