மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க குடியரசு, கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடாகும். அந்த நாட்டில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களால் கடந்த மார்ச் மாதம் அந்நாட்டு அதிபர் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து முஸ்லிம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்குமிடையே மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற மோதல்கள் காரணமாக இறந்த 461 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் இதுதவிர இறந்த முஸ்லிம்களின் உடல்கள் மசூதிகளில் அடக்கம் செய்யப்பட்டதால் அவர்களின் இறப்பு எண்ணிக்கை தெரியவில்லை என்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment