ஆப்கனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நேட்டோ படையினரைக் குறி வைத்து புதன்கிழமை தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தற்கொலைப் படை பயங்கரவாதி உயிரிழந்தார். பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டதை உள்துறை அமைச்சர் சித்திக் உறுதி செய்தார்.
இச்சம்பவம் குறித்து நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "காபூல் விமான நிலையத்துக்கு வந்த நேட்டோ படை வீரர்களை நோக்கி, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை பயங்கரவாதி ஓட்டி வந்தார். ஆனால், நேட்டோ படையினரை அடையும் முன்பே கார் வெடித்து விட்டது' என்று தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம், காபூல் விமான நிலையத்துக்கு அருகே வெளிநாட்டினரைக் குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment