நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்ச்சியின்போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில் சோகமான சூழ்நிலையில், மூவரும் ஒட்டிக்கொண்டு கைபேசியிலேயே படம் பிடித்துக்கொண்டது பொருத்தமற்ற ஒரு செயல் என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. மற்றொரு பத்திரிகை கூறுகையில், ஒபாமாவின் மனைவி இதனை வெறுப்புடன் பார்த்ததாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment