இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க, இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா உள்ளிட்ட தனது அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவு கொள்வதையே விரும்புவதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான அனைத்து விவகாரங்களுக்கும் அமைதியான முறையிலும், ராஜீய வழியிலும் நடுநிலையான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இந்திய-பாகிஸ்தான் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற எங்களின் ஆர்வமே இதற்கு காரணம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment