25.12.13

முலாயம் சிங் பேச்சு: முஸ்லிம் மதத் தலைவர்கள், பாஜக கண்டனம்

முசாஃபர்நகரில் உள்ள நிவாரண முகாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
"முசாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் நிவாரண முகாமில் இல்லை. அங்குள்ளவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள், மாநில அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்' என்று முலாயம் சிங் யாதவ் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
இதற்கு முஸ்லிம் மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் செயலர் மெüலானா நிஜாமுதீன் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், "முலாயமின் கருத்து அரசியல் சார்புடையது.
முகாமில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால்தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப மறுக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
இது குறித்து பாஜகவின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், "முலாயமின் கருத்து, அக்கட்சித் தலைவர்களின் மனநிலையை காட்டுகிறது. மதச்சார்பற்ற கட்சி என்ற பெயரில் முலாயம் சிங் அரசியல் நடத்துகிறார்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment