ஜெய், நஸ்ரியா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. இந்தப் படத்தை அனிஸ் இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
ராகவன் என்கிற விஜயராகவாச்சாரி பாரம்பரியமான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவன். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறான். வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கோயம்புத்தூரில் இருக்கும் நண்பன் வீட்டுக்குச் செல்கிறான்.
ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், ப்ளாக்கில் அபுபக்கர் என்பவரின் டிக்கெட்டை வாங்கிப் பயணம் செய்கிறான். அந்தப் பயணத்தில் ஆயிஷா என்ற முஸ்லிம் பெண்ணிடம் மனதைப் பறிகொடுக்கிறான். அவளிடம் தான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிப் பழகுகிறான். ஆயிஷாவிற்கும் அவனை பிடித்துப்போக, இருவரும் நட்பாகப் பழக ஆரம்பிக்கின்றனர். ஆனால், ராகவன் மனதில் அவளைக் காதலித்து மணந்துகொள்ளும் ஆசை இருக்கிறது. பயணத்தின் முடிவில் இருவரும் பிரிகின்றனர்.
ரயில் நிலையத்தில் இருந்து ஆயிஷா தன் வீட்டுக்குச் செல்கிறாள். அது பாரம்பரியமான ஐயங்கார் வீடு. ஆம், ராகவனைப் போல ஆயிஷாவும் ஐயங்கார் வீட்டுப் பெண் தான். ராகவனைப் போலவே ஆயிஷா என்ற பெயரில் அவள் பயணம் செய்திருக்கிறாள். இரண்டு பேருமே தங்களை முஸ்லிம் என்று சொல்லி ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொண்டு காதலிக்கின்றனர். உண்மை தெரியவரும்போது இருவரும் இணைந்தார்களா என்பது மீதிக்கதை.

No comments:
Post a Comment