25.12.13

"பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்'

புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வம்சாவளி அமெரிக்க வழக்குரைஞர் ரவி பாத்ரா வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புது தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.
இது குறித்து வாஷிங்டனில் வழக்குரைஞர் ரவி பாத்ரா செய்தியாளர்களிடம் கூறியது:
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க தூதர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,அமெரிக்க தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீண்டும் நிறுவுவது அவசியமாகும் என்றார் ரவி பாத்ரா.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர் சோனியா காந்தி சார்பில் வழக்குரைஞர் ரவி பாத்ரா அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment