தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், போலீஸாருக்கும் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். கலவரக்காரர்களைக் கலைக்க போலீஸார் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்குமாறு தாய்லாந்து அரசிடம் தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
தாய்லாந்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பதிவு செய்வதற்கு டிசம்பர் 27-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, பாங்காக்கில் உள்ள தாய்லாந்து-ஜப்பான் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 27 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை கூடியிருந்தனர்.
கடந்த திங்கள்கிழமை இதேபோல பதிவு செய்ய வந்த அரசியல் கட்சியினரை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர். இதனால், இந்தமுறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் உள்ளே வந்ததும் மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. மேலும், மைதானக் கதவுகளின் முன்பு போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
எனினும், துப்பாக்கி மற்றும் கற்களுடன் அங்கு சென்ற எதிர்ப்பாளர்கள், விளையாட்டு மைதானத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளை நுழைய முயன்றனர். தடுக்க முயன்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயர் போலீஸ் அதிகாரி நரோங் பிடிசிட் (45) உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் பலமுறை சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், போலீஸாருக்கும் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். கலவரக்காரர்களைக் கலைக்க போலீஸார் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்குமாறு தாய்லாந்து அரசிடம் தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.
தாய்லாந்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பதிவு செய்வதற்கு டிசம்பர் 27-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, பாங்காக்கில் உள்ள தாய்லாந்து-ஜப்பான் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 27 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களது வேட்பாளர்கள் பட்டியலை பதிவு செய்வதற்காக வியாழக்கிழமை கூடியிருந்தனர்.
கடந்த திங்கள்கிழமை இதேபோல பதிவு செய்ய வந்த அரசியல் கட்சியினரை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர். இதனால், இந்தமுறை அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் உள்ளே வந்ததும் மைதானத்தின் கதவுகள் பூட்டப்பட்டன. மேலும், மைதானக் கதவுகளின் முன்பு போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
எனினும், துப்பாக்கி மற்றும் கற்களுடன் அங்கு சென்ற எதிர்ப்பாளர்கள், விளையாட்டு மைதானத்தின் பூட்டுகளை உடைத்து உள்ளை நுழைய முயன்றனர். தடுக்க முயன்ற போலீஸார் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயர் போலீஸ் அதிகாரி நரோங் பிடிசிட் (45) உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு துப்பாக்கியால் பலமுறை சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் 48 எதிர்ப்பாளர்கள் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment