22.12.13

தொழிலாளர் ஆதரவு இயக்கங்களைத் திரட்டி தேர்தலில் போட்டி: மக்களாட்சி இயக்கம் திட்டம்

தொழிலாளர்கள், விவசாயிகளை ஆதரிக்கும் அமைப்புகள், கட்சிகளை ஒருங்கிணைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று, மக்களாட்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பி.பாஸ்கர் கூறினார்.
ஈரோட்டில் விவசாயிகள், தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்திய பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைக்காகப் பாடுபடும் இயக்கங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், பணக்காரர்கள், பெரும் தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவாக இயங்கி வருகின்றன. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம்.இடதுசாரிக் கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம். ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளைச் சந்தித்து இக்கூட்டணியில் இணைக்க முடிவு செய்துள்ளோம். உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரம் பெறுவதே எங்கள் நோக்கம் என்றார்.
இக்கூட்டத்தில் தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சின் மாநிலச் செயலர் ஈ.வி.கே. சண்முகம், தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி, மக்கள் மன்றத் தலைவர் செல்லப்பன், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத் தலைவர் மணிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment