27.12.13

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: ஒருவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 31 பேரிடம் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் திருச்சியில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி, பர்மா காலனியைச் சேர்ந்த முத்துவேல் மகன் ராஜேஷ்கண்ணன் (39). இவர் தற்போது திருச்சி, விமான நிலையம், மருவூகரசி தெருவில் வசித்து வருகிறார்.
இவர் மலேசியவில் தான் வைத்திருக்கும் ஹோட்டல் மற்றும் புருனே, சிங்கப்பூரில் தனது நண்பர் வைத்திருக்கும் ஹோட்டலுக்கு பணிபுரியவதற்காக ஆட்கள் தேர்வை நடத்தியுள்ளார்.
இந்த தேர்வில் காரைக்குடி, தேவக்கோட்டைச் சேர்ந்த 23 பேர், திருவாரூர், மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை, வெள்ளவிடுதியைச் சேர்ந்த 8 பேரிடம்  இரண்டு மாதத்தில் வேலைக்கு அனுப்பி விடுவதாக கூறி அவர்களிடம் தலா ரூ.2 லட்சம் ரொக்கத்தை பெற்றுள்ளார்.
மூன்று மாதத்திற்கும் மேலாகியும் அவர்களை வேலைக்கு அனுப்பவில்லை. வேலைக்காக காத்திருந்த பணம் கொடுத்தவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வேலை என்னாச்சு என்று ராஜேஷ்கண்ணனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இசிஎன்ஆர் வாங்கவேண்டும், மருத்துவர் பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறி மேலும் அவர்களிடம் ரூ. 3,000 ரொக்கத்தை பெற்று சென்றார்.
பின்பு அவர்களிடம் விசா,டிக்கெட், தயாராக இருக்கிறது டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அனைவரும் வெளிநாட்டிற்கு செல்லவேண்டும் என்று ராஜேஷ்கண்ணன் கூறியுள்ளார். இதனை கேட்ட பணம் கொடுத்தவர்கள் டிச.4 ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வந்தனர்.
அப்போது அங்கு வந்த ராஜேஷ்கண்ணனின் மனைவி முத்துலட்சுமி வந்தவர்களிடம் இன்னும் டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றும், உங்களது உடைமைகளை மருவூர் தெருவில் உள்ள எங்களது வீட்டில் வைத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி அனைவரும் உடைமைகளை அவர்களது வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் பணத்தை கொடுத்தவர்களான காரைக்குடி, அழகப்பாபுரத்தைச் சேர்ந்த ஷீயாம், தேவக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை உடைமைகளை எடுக்க வந்த போது ராஜேஷ்கண்ணனின் பேச்சியிலும் நடத்தையிலும் அவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே மற்ற நபர்களிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அனைவரையும் வரவழைத்தனர். பின்பு அவர்கள் ராஜேஷ்கண்ணன் வீட்டின் முன்பு திரண்டு கட்டிய பணத்தை உடனே திருப்பி தரவேண்டும் என்று கூறிய அவரது வீட்டை முற்றுகையிóட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ராஜேஷ்கண்ணன் இரவு வீட்டிற்கு வராமல் தலைமறைவானர்.
இந்த போராட்டம் வியாழக்கிழமை காலை வரை நீடித்துக்கொண்டு இருந்தது. இதையறிந்த விமான நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ராஜேஷ்கண்ணன் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் ராஜேஷ்கண்ணனை பிடித்து காரைக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment