10.12.13

ஜாபர் சேட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு



முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி எம்.எஸ்.ஜாபர் சேட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பான அரசு ஆணையை மத்திய அரசு வழக்குரைஞர் பவானி சுப்புராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ஜாபர் சேட் இருந்தார். இவர் பதவியிலிருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
அதில், ஜாபர் சேட் உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் ஜாபர் சேட் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்தது.
இந்த நிலையில், ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில்,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் 750 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. நீதிமன்றத்தில் ஆஜராக அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என ஜாபர் சேட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரினார். .
இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்பு திங்கள்கிழமை (டிச.9) விôசரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசு வழக்குரைஞர் பவானி சுப்புராவ் ஆஜராகி மத்திய அரசின் ஆணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வீட்டு மனை வாங்கியதில் ரூ. 1.49 கோடி ஏமாற்றியதாக ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில், ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டு மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், ஜாபர் சேட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க முடியாது என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இதற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஜனவரி 7-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment