17.12.13

எம்.பி. பதவியை கனிமொழி ராஜிநாமா செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்



கனிமொழி தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் திங்கள்கிழமை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது: காங்கிரஸூடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது நிம்மதியாக இருக்கிறது. புத்தாண்டு பரிசு கொடுத்தது போல மகிழ்கிறோம்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவில்தான் கனிமொழி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கனிமொழி தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்வார் என நம்புகிறேன். அப்படி கனிமொழி ராஜிநாமா செய்து விட்டால், சுயமரியாதையுள்ள முதல் தமிழர் கருணாநிதி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் துரோகம் செய்ததாக வரலாற்றை மறந்து விட்டு கருணாநிதி பேசுகிறார். 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மைனாரிட்டியாகத்தான் இருந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன்தான் திமுக ஆட்சி நடத்தியது.
இதை கருணாநிதி மறந்திருக்க மாட்டார். எனவே திமுகதான் காங்கிரஸூக்குத் துரோகம் செய்தது என்றார் அவர்.

No comments:

Post a Comment