6.12.13

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது தென்ஆப்பிரிக்கா



ஜோகனஸ்பர்க்,
3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. தென்ஆப்பிரிக்க அணியில் சுமித் சேர்க்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாரும் நீக்கப்பட்டார். பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல், 5 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அதே சமயம் இந்திய அணியில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வென்ற அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி, மழைக்குரிய வானிலை மற்றும் இரவில் பனியின் தாக்கம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. டுமினி 59 ரன்களுடன் (29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.
அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியை தென் ஆப்ரிக்கா 41 ஓவர்களில் சுருட்டியது. இந்திய அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்கள் மட்டும் எடுத்தது. தென்ஆப்பிரிக்காவின் அசுர வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஷிகர் தவான் (12 ரன்), விராட் கோலி (31 ரன்), யுவராஜ்சிங் (0) சீக்கிரம் காலியானார்கள். ரோகித் ஷர்மா (18 ரன், 18 ரன்), ரெய்னா(14 ரன்) டோனி (65 ரன்) ஜடேஜா (29 ரன்) அஸ்வின் (19 ரன்) அவுட் ஆனார்கள். குமார், முகமத் சமி ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்கள்.

No comments:

Post a Comment