6.12.13

கருவுற்ற பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்!


தாயின் ஒவ்­வொரு மாற்­றமும் கருவில் இருக்கும் குழந்­தைக்கும் ஏற்­படும். உட­லாலும், மன­தாலும் கரு­வுற்ற பெண்­ணிற்கு சிறு பாதிப்பு ஏற்­பட்­டாலும் அது கருவில் இருக்கும் குழந்­தைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.  

இவ்­வாறு ஏற்­படும் பாதிப்­புகள் அல்­லது மாற்­றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்­லது மூன்று ஆண்­டுகள் வளர்ந்த பின் கூட ஏற்­படும். ஒரு குழந்தை மன­தாலும் உட­லாலும்  ஆரோக்­கி­ய­மாக வளர்ச்­சி­ய­டைய  அக் குழந்தை கரு­வுற்­றிக்­கும்­போதே  சில நடை­மு­றை­களை பெண்கள்  கடைப்­பி­டித்து வர­வேண்டும். அவை­யா­வன:

* கரு­வுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலை­யுடன் இருப்­பதை தவிர்ப்­பது நல்­லது.

* குளிர்ந்த காற்று, வாடைக்­காற்று, பனிக்­காற்று வீசும் இடங்­களில் நிற்கக் கூடாது. ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

* மழை­யிலோ மழைச் சார­லிலோ நனையக் கூடாது. அவ்­வாறு நனைய நேரிட்டால் வீட்­டிற்கு வந்­த­வுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உட­லையும் தலை­யையும் நன்கு துடைக்­க­வேண்டும்.

* எப்­போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பரு­கு­வது நல்­லது. அதிக சூடான நீரை அருந்­துதல் நல்­ல­தல்ல. குளிர்­சா­தனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்­பா­னங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்­களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்­காமல் பார்த்­துக்­கொள்­ளலாம். கரு­வுற்ற பெண்­ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்­தையைப் பாதிக்கும்.

* கரு­வுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி கார­ண­மாக உணவை தவிர்ப்­பார்கள். அப்­படி தவிர்ப்­பதால் குழந்­தைக்குத் தேவை­யான சத்­துக்கள் கிடைக்­காமல் போகும்.

* அதிக காரம், புளிப்பு உள்ள உண­வு­களை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீர­ண­மாகும் உண­வு­களை உண்ண வேண்டும்.

*சத்து மாத்­தி­ரை­களை நேர­டி­யாக உப­யோ­கிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானி­யங்கள் காய்­க­றிகள் போன்­ற­வற்றில் தேவை­யான சத்­துக்கள் அனைத்தும் கிடைக்­கின்­றன. சத்து மாத்­தி­ரை­களை உப­யோ­கித்தால் அவை சில நேரங்­களில் தாயின் உடல் சம­நி­லைப்­பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்­தையை பாதிக்க ஆரம்­பிக்கும். 

இதனால் குழந்­தைகள் பிறந்து சில நாட்கள் நன்­றாக இருந்து, பின்பு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். சில குழந்­தை­க­ளுக்கு உடல் உறுப்­புகள் பாதிக்­கப்­படும்.

* மதிய உணவில் ஏதா­வது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்­களைத் தவிர்த்து மற்ற பழங்­களைச் சாப்­பி­டு­வது நல்­லது.

*கர்ப்­பிணிப் பெண்கள் சரி­யான நேரத்­திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்­ட­வுடன் உறங்கச் செல்லக் கூடாது.  முடிந்­த­வரை பகல் நேர உறக்­கத்தை தவிர்ப்­பது நல்­லது.

* தொலைக்­காட்­சியை அதிக நேரம் பார்த்துக் கொண்­டி­ருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்­சி­களைப் பார்ப்­பதைத் தவிர்க்க வேண்டும்.

* மழை, இடி, மின்னல் ஏற்­படும் போது வெளியே செல்­வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயி­லிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்­கடி உள்ள திரு­விழா, கடை வீதி­க­ளுக்கு செல்­வது நல்­ல­தல்ல.

* அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

* இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment