6.12.13

டெலிபோன் உரையாடல் தொடர்பாக நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை



புதுடெல்லி,
கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் நீரா ராடியா, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் டெலிபோனில் பேசிய விவரங்கள், ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் பதிவு செய்துள்ளது. அந்த சி.டி.க்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டு ஒரு கமிட்டியை அமைத்தது. அக்கமிட்டி, 23 உரையாடல்களில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தது
அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 14 உரையாடல்கள் பற்றி விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதன்படி, 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட் விசாரணையை அறிக்கையை இரண்டு மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தற்போது இது தொடர்பாக நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.

No comments:

Post a Comment