கழுத்துவலி இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால், இன்றைய இளைஞர்களின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் நவீன
வாழ்க்கை முறை, மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றில் மோசமான வீதியில் பயணம் செய்வது, அதிகநேரம் குனிந்து அமர்ந்து கணினியில் வேலைப்பார்ப்பது, எடையுள்ள பொருட்களை திடீரென தூக்குவது, உயரமான தலையணை வைத்து அதிக நேரம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற செயல்களால் கழுத்து பகுதியில் சவ்வு பலவீனமடைந்து வலி ஏற்படுகிறது.
கழுத்துவலி வராமல் இருக்க உயரமான தலையணை, சமனில்லா படுக்கையை உபயோகப்படுத்தக்கூடாது. இரு சக்கர வாகனங்கள், கார், ஆட்டோவில் நீண்டதூர பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அதிக எடை தூக்கக் கூடாது.
வைத்தியரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். இது கழுத்தை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்தும்.
அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். மேற்கூறப்பட்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம் கழுத்துவலி வராமல் தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment