6.12.13

உலக அளவில் நாள் தோறும் 500 கோடி செல்போன் தகவல்களை அமெரிக்க திரட்டியது புதிய தகவல்



வாஷிங்டன்,
உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்களின் டெலிபோன் பேச்சுக்களை அமெரிக்க உளவுத்துறை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ரகசிய தகவல்களை வெளியிட்ட முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்நோடென் தற்போது ரஷியாவில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
இதற்கிடையில் அமெரிக்கா உலக அளவில் நாள் தோறும் அமெரிக்கர்கள் தவிர 5 பில்லியன் (500 கோடி) செல்போன் தகவல்களை சேகரித்து வந்ததாக வாஷிங்டனில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை கூறுகிறது. உளவுத்துறையில் அனுமதியுடன் இணையதளம் மூலம் செல்போன் பேச்சுக்களை திரட்டினோம் என்பதை ஒப்புக் கொண்ட அமெரிக்க தகவல் சேகரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மேலும் கூறுகையில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருந்த பல லட்சம் அமெரிக்கர்களின் செல்போன்களையும் ஒட்டு கேட்பதில் ஈடுபட்டோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment