17.12.13

செம்பொன்விளை உயர் மின்னழுத்தப் பாதையில் பணிகள்: டிச. 18 இரவு சுழற்சி முறையில் மின்தடை

17 December 2013 07:47 AM IST
கன்னியாகுமரி மாவட்டம், செம்பொன்விளை துணை மின்நிலையத்திற்கு மின்னூட்டம் வழங்கும் உயர் மின்னழுத்தப் பாதையில் பணிகள் நடைபெறுவதையடுத்து புதன்கிழமை இரவு (டிச.18) சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து குமரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: செம்பொன்விளை துணை மின் நிலையத்திற்கு மின்னூட்டம் வழங்கும் உயர் மின்னழுத்த பாதையில் 110 கி.வோ. உயர் மின்னழுத்த கோபுரம் மாற்றும் பணிகள் டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி மாலை வரை நடைபெறுகிறது.
எனவே செம்பொன்விளை மற்றும் சேரமங்கலம் துணை மின்நிலையங்களில் இருந்து மின்னூட்டம் பெறும் திங்கள்சந்தை, கண்டன்விளை, இரணியல், தலக்குளம், சாஸ்தாங்கரை, குளச்சல், கோடிமுனை, சைமன்காலனி, கீழக்கரை, முக்காடு, பாளையம், சேனம்விளை, திக்கணங்கோடு, பாலப்பள்ளம், ஆலஞ்சி, ரீத்தாபுரம், வாணியக்குடி, படர்நிலம், வெள்ளிச்சந்தை, வடக்கன்பாகம், கடியப்பட்டிணம், மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, வெட்டுமடை, கூட்டுமங்கலம், பெரியவிளை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் டிசம்பர் 18ஆம் தேதி அன்று இரவு சுழற்சி முறையில் மின்தடை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment