17.12.13

நிலவில் ஆராய்ச்சி: 2017ல் இன்னொரு விண்கலத்தை விண்ணிற்கு செலுத்த சீன திட்டம்

17 December 2013 08:01 AM IST
சீனாவின் முதல் விண்கலமான சாங் ஏ-3 சமீபத்தில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இந்த விண்கலம் 3 திட்டப்பணிகளையும் 3 வகையான அறிவியல் ஆய்வுகளையும் செய்யும் என கூறப்பட்டது.  இந்நிலையில் சீனா சாங் ஏ-5 என்ற இன்னொரு விண்கலத்தை 2017ம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீனத் தேசியப் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் வூ ச்சி ஜியென் கூறுகையில் சாங் ஏ-5 விண்கலமானது சந்திரனில் ஆளில்லா நிலையில் தானாக மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும். தற்போது விண்கலத்தின் ஆய்வுப்பணிகள் துரிதமாக நடந்துவருகிறது. 2017ம் ஆண்டில் இப்பணி முடிந்து உரிய நேரத்தில் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment