17.12.13

தில்லியில் ஆட்சி அமைக்க பாஜக குதிரை பேரம் நடத்தாது: நிர்மலா சீதாராமன்


தில்லியில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக குதிரை பேரம் நடத்தாது என்று அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கைத் தமிழர்களின் முக்கியமான பிரச்னைகளில்கூட மத்திய அரசால் திடமான முடிவு எடுக்க முடியவில்லை.
தமிழர்களின் மன உணர்வுகளை அறிந்து, அதன்படி செயல்பட மத்திய அரசு தவறிவிட்டது.
லோக்பால் மசோதாவைப் பொருத்தவரை தேர்வுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அம்சங்களை மத்திய அமைச்சரவைக்கு எடுத்துச் சென்று, அதில் திருத்தங்களைச் செய்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்ற சட்டத்துக்கு எதிரானது. தில்லியில் பாஜக ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரம் நடத்தாது.
பாஜகவுடன் திமுக கூட்டணி இல்லை என்று கூறியது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை.
தமிழகத்தில் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி மக்களின் கருத்துகளை அறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தேசியச் செயலாளர் தமிழிசை செüந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment