24.12.13

கரும்பு விலை: டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்: கருணாநிதி


கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
திமுக ஆட்சியில் விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும்.
ஆனால் இப்போது அதிமுக ஆட்சியில் முத்தரப்பு கூட்டமே நடத்தப்படுவதில்லை. ஒரு தலைப்பட்சமாக அரசின் அதிகாரப்படிதான் கரும்புக்குக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
திமுக பொதுக்குழுவில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரமும்,  கரும்பு கொள்முதல் விலையை குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு ரூ.3,500-மும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
ஆனால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,650 மட்டும் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கரும்பு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment