விழுப்புரத்தில் போலீஸாரின் அனுமதியில்லாமல் ஊர்வலம் நடத்திய சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் கழகத்தைச் சேர்ந்த 1600 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மனித உரிமைகள் கழகத்தின் சர்வதேச அமைப்பு சார்பில் 13-வது தேசிய மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது.
காவல்துறையின் அனுமதியில்லாமல் இந்த ஊர்வலம் நடைபெற்றதாக மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் சுரேஷ்கண்ணன், செயலர் ஜெயபாலன், தலைமை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட 1300 ஆண்கள், 300 பெண்கள் மீது விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment