சென்னை ரிச் தெருவில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சாம்சங் செல்போன் போலி உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அண்ணா சாலை ரிச் தெருவில் சில கடைகளில் சாம்சங் செல்போன் நிறுவனத்தின் போலி உதிரி பாகங்கள் விற்கப்படுவதாக அந்த நிறுவனத்தினர், சி.பி.சி.ஐ.டி. திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவில் புகார் செய்தனர். அப் புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சந்தேகத்துக்கு இடமான கடைகளில் திங்கள்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் அந்தக் கடைகளில் சாம்சங் செல்போன் நிறுவனத்தின் சார்ஜர், பேட்டரி,ஹேட்போன் உள்ளிட்ட போலி உதிரி பாகங்கள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த போலி உதிரிபாகங்களை பறிமுதல் செய்து, அந்தக் கடைகளின் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை கைது செய்தனர். சோதனையின் முடிவில் ரூ. 50 லட்சம் மதிóப்புள்ள 12 ஆயிரம் சாம்சங் செல்போன் நிறுவனத்தின் போலி உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீஸார் அறிவுசார் சொத்து உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment