24.12.13

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

பெங்களூரு எலஹங்காவில் திங்கள்கிழமை ரயில் சக்கர தொழிற்சாலையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ரயில்களுக்கான எரிபொருள்களின் கட்டணம் உயர்ந்துள்ளதால், ரயில் கட்டணத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், தற்போது ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை. கர்நாடக மாநிலம், குல்பர்காவில் ரயில்வே நிர்வாகம் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். யாதகிரியில் எல்.எச்.பி. நிறுவனத்துடன் இணைந்து ரூ. 750 கோடியில் ரயில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். இதற்காக, கர்நாடக அரசு 150 ஏக்கர் நிலத்தை தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பணிகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

No comments:

Post a Comment